இந்த நடிகருக்கு 20 ஆஸ்கர் விருது கிடைக்கணும்.. 76 வயது நடிகருடன் ஹாலிவுட் நடிகரை ஒப்பிட்ட மிஸ்கின்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் முதலில் காமெடி படங்கள் ஆக்சன் படங்கள் என வெளியாகி வந்த நிலையில் தற்போது எல்லாம் ஆபாசம் நிறைந்த படங்கள் தான் அதிகம் வெளியாகி வருகின்றன. இவ்வளவு ஏன் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு ஆபாச வசனம் மற்றும் ஏதாவது ஒரு கேவலமான காட்சியில் வைக்காத இயக்குனர்களை கிடையாது என்றுதான் கூறவேண்டும்.

அந்த அளவிற்கு ஏராளமான இயக்குனர்கள் தங்களது படங்களில் ஏதாவது ஒரு காட்சியை வைத்து விடுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லுவது ரசிகர்கள் அதனை விரும்புகிறார்கள். அதனால்தான் காட்சிகள் வைக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர். சொல்லப் போனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான் ரசிகர்களும் இதனைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் படங்கள் அனைத்திலுமே இந்த மாதிரியான காட்சிகள் இடம்பெற காரணமாக அமைகிறது.

சமீபத்தில் கூட வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தின் சிறிய வீடியோ வெளியானது. அதில் முழுக்க முழுக்க முத்தம் கொடுக்கும் காட்சிகளாக இடம் பெற்றது. இதற்கு கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்தனர். கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மற்ற ஊடகங்களிலும் பார்த்து கிட்டத்தட்ட பல மில்லியனுக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் மிஸ்கின் கடைசி விவசாயி படத்தை பார்த்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். இத்தனை வருடங்களாக கேவலமான படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது ஒரு உயர்தரமான தமிழ் படம் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இப்படத்தில் முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். இவருடன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிஸ்கின் இந்த படத்தில் நடித்த அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் கிட்டத்தட்ட 20 ஆஸ்கர் விருதுகளை பெற்று இருக்கும் எனக் கூறியுள்ளார். அதாவது அந்த அளவிற்கு அந்த முதியவர் சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.