இந்த சீசனில் டைட்டில் அடிக்க போவது இவர்தான்? பிரியங்காவை விட்டுக்கொடுத்து பேசிய அபிஷேக்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் போட்டியில் இருந்து விலகி வெளியே சென்ற அபிஷேக் ராஜா பிக்பாஸ் குறித்து பல விஷயங்களை அள்ளி தெளிக்கிறார். பிக்பாஸ் வீட்டில் தனது தோழி பிரியங்கா, தனது மகள் மதுமிதா மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் பாவனி என போட்டியாளர்களை உறவுமுறை வைத்து கூறிவந்தவர் அபிஷேக்.

மேலும் இவர் மதுமிதா தன்னை விட இரண்டு வயது பெரியவர், ஆனாலும் அவர் எனக்கு குழந்தை போலவே தெரிகிறார் என்றும், பிரியங்கா தான் தனக்கு இந்த வீட்டில் மிகவும் பிடித்தவர் என்று மனம் திறந்து பேசியுள்ளார். ஆரம்பத்தில் பிரியங்கா இவரை திரும்பி கூட பார்க்காமல் இருக்க இவர் அக்கா சென்டிமென்டை பயன்படுத்தி அழுது, அவருடன் ஜாயின்டாகிவிட்டார்.

இவர் 11 வருடம் இண்டஸ்ட்ரியில் கலக்கி வரும் பிரியங்காவுடன் கூட்டணி வைத்தால் தான் நான் பிரபலமடைய முடியும் எனத் தந்திரமாக யோசித்து அதற்காக இதைவிட அதிகமாக அழச் சொன்னாலும் அழுக தயார் என நாசுக்காக அரசியல் பேசினார்.

மேலும் இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை நான் பார்த்ததில்லை எனக்கூறிவிட்டு அதில் நடந்த பல விஷயங்களை கமலிடம் புட்டுப்புட்டு வைத்ததோடு மட்டுமல்லாமல் தற்பொழுதும் அப்படியே கூறிக்கொண்டு சுருதி தாமரையின் காயினை திருடியது வரை இவர் பேசிய அனைத்தையும் நினைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இவர் இந்த சீசனில் டைட்டில் அடிக்க போவது இவர்தான் என ஆணித்தனமாக கணித்து கூறியுள்ளார். நிரூப்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என அடித்துக் கூறுகிறார். ஏனெனில் நிரூப் இந்த ஷோவை நன்றாக பார்த்து அதற்கேற்ப தன்னை தயாரித்து சரியாக விளையாடுகிறார் மற்றும் இவர் யாரிடமும் நட்பையோ, பகையோ சம்பாதிக்கவில்லை. கேம் விளையாடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் என அபிஷேக் வெளிப்படையாக பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் கடந்த 2 சீசன்களாக பெண்கள் யாரும் இந்தப்போட்டியில் வெற்றி பெறாத நிலையில் ஒருவேளை சுருதி அவர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கும் எனக் கூறி, அந்த வாய்ப்பு தன் தோழி என சொல்லும் பிரியங்காவுக்கு இல்லை என்பதை நாசூக்காக தெரிவித்தார்.