இந்த ஒரே படத்தை மலைபோல் நம்பி இருக்கும் கவின்.. பல தடைகளை தாண்டி வெளிவந்த ரிலீஸ் தேதி

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் கவின். இதனை அடுத்து சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த தொடர் மூலம் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கவின் நட்புனா என்னனு தெரியுமா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்த ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செலிபிரிட்டி என்றால் அது கவின் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நண்பர்களுக்காக விட்டுக்கொடுத்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனால் கவினுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் லிப்ட். ஆனால் படம் தயாராகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின் மற்றும் அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படம் ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் திரில் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் தயாரான நிலையில் திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.

லிப்ட படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வினித் வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே கவின் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆட்டத்திற்கு தயாரான விஜய்.. கேப்டனாக இருந்து வழிநடத்தும் வெங்கட் பிரபு

தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்து லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67 வது படத்தில் இணையவிருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார். ...