இந்த ஒரு படத்தை மலைபோல் நம்பிய வாணி போஜன்.. நம்ப வைத்து கழுத்தறுத்த படக்குழு

சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டதால் சீரியலுக்கு முழுக்கு போட்ட பிரபலங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் வாணி போஜன் தனக்கு இருந்த சீரியல் வாய்ப்பு எல்லாம் தூக்கி போட்டுவிட்டு சினிமாவில் நடித்து வருகிறார். பெரிய பெரிய ஹீரோக்கள் படங்களில் கமிட்டாகி எப்படியாவது ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்.

அந்த வகையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகான். இப்படத்தில் இவர்கள் இருவரும் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அமேசான் OTT தளத்தில் படத்தை வெளியிட்டனர்.

படத்தை பார்த்த பல ரசிகர்கள் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பு அருமையாக இருப்பதாகவும் இவர்கள் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இப்படத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவருக்கு தான். இதனாலே படத்தில் நடித்த நடிகர்கள் ஏன்டா இப்படத்தில் நடித்தோம் என்ற அளவிற்கு தற்போது வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வாணிபோஜன் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஏனென்றால் இப்படத்தின் வெற்றி மூலம் தான் தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு ஏன் வாணி போஜன் இதுவரைக்கும் எந்த ஒரு பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது இல்லை.

விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளதால் கண்டிப்பாக தனது சினிமாவின் வளர்ச்சிக்கு இப்படம் பெரிதும் உதவும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி இவரது காட்சிகள் எதுவும் படத்தில் இடம் பெறவில்லை காரணம் படத்தின் நீளம் காரணமாக வாணி போஜன் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வாணி போஜன் கவலையில் உள்ளார். மேலும் இப்படம் ஆரம்பிக்கும் போதே விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பலரும் கூறியும் கேட்காமல் இவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டது தற்போது தவறு என உணர்ந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடிகை சிருஷ்டி டாங்கே இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியானது. ஆனால் படத்தில் அவரது காட்சிகள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. அதோடு துருவ் விக்ரம் பாடிய பாடலும் இடம் பெறவில்லை. இதனால் படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது