இரட்டை வேடத்தில் ஆர்யா நடித்து மகாமுனி திரைப்படம், கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது.

மகாமுனி திரைப்படத்தில் ஒரு ஆர்யா மகாதேவன் ஆகவும் மற்றொரு வேடத்தில் முனிராஜ் ஆகவும் நடித்திருப்பார். இந்த இரு கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு படத்தின் டைட்டில் அமைந்துள்ளது.

மகாதேவன் மனைவியாக இந்துஜா ரவிச்சந்திரன் விஜி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்களுக்கு 5 வயது மகன் இருப்பார்.

முனிராஜ் ஜோடியாக தீபா கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இதில் ஜர்னலிசம் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார்.

கனடாவில் நடைபெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருது மஹிமா நம்பியார்க்கு, வருங்கால சிறந்த இயக்குனருக்கான விருது சாந்தகுமார்க்கும் வழங்கப்பட்டது.

மகாமுனி திரைப்படம் இஸ்ரேல் மற்றும் பூட்டானில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

பல விருதுகளை வென்றுள்ள மகாமுனி திரைப்படம், இதில் இரட்டை வேடத்தில் நடித்த ஆர்யாவுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.