இந்தியளவில் யாருக்கும் இல்லாத துணிச்சல்.. நேருக்கு நேராக மோத தயாரான விஜய்

தளபதி விஜய் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வசூலில் மாஸ் காட்டும் நடிகராக இருக்கிறார். இதனால் இவருடைய படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவர் தற்போது முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.

பிரபல கன்னட நடிகர் யாஷ், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்தத் திரைப்படம் பல கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாக இருப்பதால் இந்தப் படத்துடன் போட்டி போட விரும்பாமல் பல தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர். அதில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களின் திரைப்படங்களும் அடக்கம்.

இதனால் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் தள்ளிப்போகும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 13 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பலரும் கேஜிஎப் உடன் போட்டி போட முடியாமல் விலகி வரும் நிலையில் விஜய் தன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால் நாங்க யாருக்கும் பயந்து ஒதுங்கிப் போக மாட்டோம் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.