இந்தியன் 2-க்கு வந்த தலைவலி.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது போல

ஷங்கர் இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததும் போதும் பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அதாவது ஆரம்பத்தில் இப்படத்தில் ட்ரோன் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின்பு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் ஷங்கருக்கு இடையே பிரச்சனை போய்க்கொண்டிருந்தது.

இந்த விஷயம் கோர்ட், கேஸ் போனதால் படப்பிடிப்பு மேலும் தாமதமாகிக் கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி இப்படத்தில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வாலும் கர்ப்பமாக இருந்ததால் படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பின் இயக்குனர் ஷங்கரின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை நிலவியது.

அது மட்டுமன்றி உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். தற்போது உதயநிதி தலையிட்டு லைக்கா, ஷங்கர் இடையே பிரச்சனையை சுமூகமாக முடிந்துள்ளது. இதனால் விரைவில் ஷூட்டிங் தொடங்கயுள்ளது என அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

மேலும் இந்தியன்-2 படப்பிடிப்புக்காக பத்து மாதம் பிரசாந்த் லேபை வாங்கியிருக்கிறார்கள். அக்டோபர் மாதத்திற்குள் ஆர்டிஸ்ட்களும் டேட் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த நேரம் பார்த்து தற்போது ஆந்திராவில் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை தொடரயுள்ளது.

ஆந்திராவில் ஸ்டிரைக் அறிவித்தால் இந்தியன் 2 படத்திற்கு என்ன பிரச்சனை என்று யோசிக்கலாம். அதாவது தற்போது இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்த ஆர்சி ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்க இருந்தார். ஆனால் தற்போது ஸ்ட்ரைக் அறிவித்ததால் இந்தியன் 2 படம் ஷங்கருக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது மிகப்பெரிய சந்தேகம் தான். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதது போல் தற்போது இந்தியன் 2 படத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டுதான் இருக்கிறது.

ரஜினி மறுத்ததால் அந்த இடத்தில் விஜய்யை வைத்த லோகேஷ்.. எப்படி பாத்தாலும் வெற்றிதான்

சினிமாவில் இயக்குனராகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு ஆசை எப்படியும் ரஜினியுடன் ஒரு படம் பணியாற்றிட வேண்டும் என்பதே இருக்கும். தற்போது பெரிய இயக்குனர்களை தவிர்த்து ரஜினி இளம் இயக்குனர்களுடன் இணைய முயற்சித்து வருவதால், தற்போதுள்ள ...