இத்தன நாள் கால்சீட் கொடுத்தும் அசிங்கப் படுத்திடாங்க.. பேட்டியில் புழம்பித் தவித்த சின்ன நயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகைகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். அவர் வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி படு பிசியாக நடித்து வருகிறார். அதில் இவர் மிகவும் எதிர்பார்த்து, ஆவலுடன் நடித்த திரைப்படம் மகான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில்தான் வாணி போஜன், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அவர் விக்ரமுடன் இணைந்து இருக்கும் படப்பிடிப்பின் போட்டோக்களும் மீடியாவில் வைரலாகி வந்தது.

இதனால் அவரை விக்ரமுக்கு ஜோடியாக திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதத்தில் மகான் திரைப்படத்தின் ஒரு காட்சியில் கூட வாணி போஜன் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக படத்தின் ஆரம்பத்தில் வாணி போஜன் பெயரை போட்டு நன்றி என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாணி போஜன் மகான் படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். மகான் படத்தில் நான் ஒன்பது நாட்கள் நடித்தேன். அதில் விக்ரம் சாருடன் முதல் பாதி ஏற்கனவே எடுத்து விட்டோம். ஆனால் இரண்டாம் பாதி எடுக்கும் போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எங்களால் ஷூட்டிங் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய கேரக்டர் இரண்டு பாதிக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இதுகுறித்து டைரக்டர் என்னிடம் கேட்ட போது எடிட் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், எனக்கு ஒரு திரைப்படத்தில் நடித்த அனுபவம் தான் முக்கியம், எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று கூறினேன்.

மேலும் இந்த படத்தில் விக்ரம் சாருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்னுடைய ரசிகர்கள் படத்தில் என்னை காணாமல் ஏமாந்து விட்டார்கள் என்று நினைக்கும்போது தான் சிறிது வருத்தமாக இருக்கிறது. மற்றபடி படத்தில் என்னுடைய காட்சிகள் இல்லாதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை, இதை பற்றி ஏற்கனவே இயக்குனர் என்னிடம் தெரிவித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.