இத்தன நாளா எங்கேயா இருந்த! ஆடிபோன அஜித்.. இனி உங்க லெவலை தாறுமாறு!

H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் போனி கபூரின் பிரமாண்டமான தயாரிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற வர இருக்கிறது வலிமை திரைப்படம். வெகு காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக வர இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் திரையரங்குகள் தெரிக்கும் என்று படக்குழு கூறியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் பெங்களூரில் நடந்தது. அதை காண படக்குழுவும் சென்றிருந்தது. ஆனால் அஜித் அதற்கு வரவில்லை என்று கூறப்பட்டது. அதன்பின் படத்தை தன் குடும்பத்தோடு அஜித் பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் அஜித்குமார்.

உடனே இத்தன நாளா எங்கேயா இருந்த என்று இயக்குனர் வினோத்தை பார்த்து கேட்பதுபோல மனதிற்குள் ஆனந்தத்தில் திளைத்து இருக்கிறார். உடனே இயக்குனர் வினோத்தின் வீட்டிற்கு நேராக சென்றிருக்கிறார் அஜித்குமார். அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. நீங்கள் சொன்னதை செய்து சாதித்துக் காட்டி விட்டீர்கள் என்று வினோத்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் வினோத்தின் தந்தையிடம் நீங்கள் இந்த படத்தை பார்த்த பிறகு உங்கள் மகனை நீங்கள் பெற்றெடுத்தற்காக பெருமைப்படுவீர்கள் என்றும் கூறி இருக்கிறார். மேலும், வினோத்தின் குடும்பத்தாருக்கு பல பரிசுப் பொருட்களையும் வாங்கிச் சென்று இருக்கிறார் அஜித் குமார்.

எப்போதும் அன்போடு மற்றவர்களிடம் பழகக்கூடியவர் அஜித் என்று அனைவர்க்கும் தெரியும். ஆனால் இதுபோன்று மனதார வீட்டிற்கு சென்று பாராட்டுவது அஜித்குமாரால் மட்டும்தான் முடியும் என்று அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

படத்தை இயக்கிய வினோத்திற்கு இதைவிட ஒரு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்து விடாது என்று அவரும் சந்தோஷத்தில் ஆடிப்போய் இருக்கிறார். இதே சந்தோஷம் ரசிகர்களும் பெறவேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கின்றனர். பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கும் இந்தப் படத்தின் வலிமை காய்ச்சல் தற்போது ரசிகர்களிடம் படு வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது