இத்தனை வருட கொள்கையை தளர்த்திய அஜித்.. இனிமேல் மனுசன கையிலயே பிடிக்க முடியாது

அஜித் தற்போது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பம்பரமாக சுழன்று நடிக்க தயாராகிவிட்டார். வலிமை திரைப்படத்தின் தாமதத்தால் ரசிகர்கள் அவரை சில ஆண்டுகள் திரையில் காண முடியாமல் போய்விட்டது. அதை ஈடுகட்டும் பொருட்டு அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

பொதுவாகவே அஜித் ஒரு திரைப்படத்தில் நடித்து முடிக்கும்வரை அடுத்த திரைப்படத்தில் கமிட்டாக மாட்டார். ஆனால் அவர் தற்போது வலிமை கூட்டணியுடன் மீண்டும் இணையான தயாராகி இருக்கிறார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

குறுகிய காலத்திலேயே இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே அஜீத்துடன் வீரம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அஜித்தை வைத்து இயக்க இருக்கிறார். இப்படி அஜித் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது அஜித் இந்த திரைப்படங்களை எல்லாம் முடித்துவிட்டு 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த தகவல்கள் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் அடுத்த சில வருடங்களுக்கு நடிப்பில் மட்டுமே தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் அஜித்தை கையிலே பிடிக்க முடியாது. அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிகின்றனர்.