இது ரியாலிட்டி ஷோ இல்லை, 100 நாள் வேலை திட்டம்.. விஜய் டிவியை வம்புக்கு இழுத்த போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளரான நடிகை கஸ்தூரி கலாய்த்து ஒரு டிவிட் போட்டுள்ளார். பிக்பாசையும், விஜய் டிவியையும் விடாமல் கலாய்த்து வரும் கஸ்தூரி தற்போது சீசன் 5 நிகழ்ச்சியை  விமர்சித்துள்ளார்.

இந்த சீசனின் ஒரு எபிசோட் கூட பார்க்காதவர்கள் என்னைப் போல் யாரும் இருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் அரவணைப்பு என்று ட்வீட் போட்டுள்ளார்.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான இவர் இது ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், இது ஒரு ஸ்கிரிப்ட் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது 100 நாள் வேலை திட்டம் என்றும் கலாய்த்துள்ளார்.

ஸ்டார் விஜய் டிவி கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் விஜய் டிவியின் ஆட்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் நீங்களும் முன்னாள் போட்டியாளர் தானே என்று கேட்டனர். அதற்கு கஸ்தூரி நான் சம்பளம் வாங்கி விட்டேன் என்று பதிலளித்துள்ளார்.  மேலும் கஸ்தூரி பிக் பாஸ் சீசன் 3  மட்டும் நல்லா இருந்ததாக கூறியுள்ளார்.

பிரிவைப் பற்றி பேசிய ரக்ஷிதா.. ஒரு பொண்ணுக்கு இத்தனை சோதனையா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இத்தொடரில் பிக் பாஸ் கவின் உடன் இணைந்து ரக்ஷிதா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இதே தொலைக்காட்சியில் ...