இது என்ன பார்த்திபனுக்கு வந்த சோதனை.. பழசை வைத்து அசிங்கப்படுத்தும் கேவலமான செயல்

பார்த்திபன் நல்ல நடிகர் என்பதை காட்டிலும் ஒரு நல்ல இயக்குனர் என அனைவராலும் மதிக்கக் கூடிய நபர். இவர் பல வித்யாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடைசியாக ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கின்னஸ் சாதனை இப்படம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது.

ஆனால் பலரும் பார்த்திபனை பற்றி பாசிட்டிவாக தான் பேசி வந்தனர். மேலும் பார்த்திபனும் அதற்கு விளக்கம் அளித்து ரோபோ ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இரவில் நிழல் படத்திற்காக பார்த்திபன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் பார்த்திபன் ஆரம்பத்தில் எடுத்த உள்ளே வெளியே படத்தில் ஆபாசமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. இதனால் எப்படி பார்த்திபன் அந்த படத்திற்கு சென்சார் வாங்கினார் என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அப்போது சென்சார் அந்த அளவிற்கு கண்டிப்பு கிடையாது.

இந்நிலையில் தற்போது இரவின் நிழல் படத்தில் அவ்வளவு ஆபாசமான வசனங்கள் உள்ளதாம். இதில் காதோடு சேர்த்து கண்களையும் மூட வேண்டுமாம், அந்த அளவுக்கு ஆபாசம் நிறைந்திருக்கிறது என படத்தில் வேலை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் படம் சென்சாருக்கு அனுப்பப்படவில்லை. சென்சாருக்கு போனால் படத்தில் நிச்சயமாக சில காட்சிகள் நீக்கப்படும். ஏற்கனவே இரவின் நிழல் படம் கிட்டத்தட்ட 100 நிமிடங்கள் தான். இதில் சில காட்சிகள் நீக்கப்பட்டால் படத்தின் நேரம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.