இது உங்களுக்கே ஓவரா தெரியல.. சிம்புவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக வலம் வருபவர் என்றால் அது நடிகர் சிம்பு மட்டும் தான். இவருக்கு இணை இவர் மட்டுமே. பல பிரச்னைகளை தாண்டி சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் மாநாடு படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சற்று முன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று மாலை 3.06 மணிக்கு மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்டு சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்ற ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

ஒரு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை அறிவிக்க ஒரு அப்டேட்டா? ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கூட தங்களின் படங்களுக்கு இவ்வளவு பில்டப் கொடுப்பதில்லை. ஆனால் சிம்பு படத்திற்கு இவ்வளவு பில்டப்பா என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிம்பு சும்மா இருந்தாலும் இந்த சர்ச்சை மட்டும் அவரை விட்டு போகாது போல. சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவர்களும் அதற்கேற்றாற்போல் பயங்கர பில்டப் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் படம் வொர்த்தா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.