இதுவரை இல்லாத வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா.. ஆஸ்கருக்கு தயாராகும் அடுத்த படம்

வெகு காலத்திற்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் பாலாவும் இணையும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் ஒப்பந்தம் ஆகி விட்டது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று படக்குழு கூறி இருந்தது. அதன்படி இயக்குனர் பாலா ஷூட்டிங்கை மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் எப்போது எங்கே ஆரம்பிக்கிறார் என்ற எந்த தகவலும் வரவில்லை..

இப்படி இருக்கையில் தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் முதல் காட்சிகளை இந்த மாதம் 18ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது படக்குழு. சூர்யா மற்றும் பாலா இருவரும் வெகு காலம் கழித்து ஒன்றாக இணைந்து இருந்தாலும், அவர்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சூர்யா இந்த படத்திற்காக பாலாவிற்கு மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். சூரியாவின் தொடர் வெற்றிகளில், இந்த படமும் இடம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எண்ணுகின்றனர். இருந்தாலும் பாலா அவ்வளவு எளிதாக நடிகர்களை விட மாட்டார். போட்டு பிழிந்து எடுத்து விடுவார். அவரின் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் பாணியே தனியாக தெரியும்.

அது சூர்யாவுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் என்பதால் அவரும் அவரை நாடி சென்றிருக்கிறார்
மேலும், இயக்குனர் பாலாவை பொருத்தவரை நடிகர் நடிகைகளை வித்தியாசமான கெட்டப்பில் காட்டுவது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து, பார்க்கும் ரசிகர்களை மிரள வைப்பது அவரது ஸ்டைல் அப்படி இருக்கையில் கண்டிப்பாக இந்த படத்திலும் வித்தியாசமான யாரும் யோசிக்காத ஒரு கெட்டப்பில் தான் சூர்யா வரப்போகிறார் என்பது இதற்கு முன்பே உறுதியாகிவிட்டது.

அதேபோல இந்த படத்தில் வாய் பேச முடியாதவராகவும், காது கேளாதவராகவும் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. சூர்யா இதற்கு முன்னர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது பேரழகன் சூர்யா தான். அதேபோல இந்த கதாபாத்திரத்திலும் பல வித்தியாசங்களை காட்டி, தனது முழுத்திறமையையும் காட்டி சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, நிச்சயமாக சூர்யாவிற்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் பாலாவின் கூட்டணியை விரும்பும் அனைத்து நடிகர் நடிகைகளும் இயக்குனர் பாலா எல்லா விஷயத்திலும் ஓகே ஆனால் படம் எடுக்க ஆரம்பித்து வெகு காலம் படத்தின் படப்பிடிப்பை இழுத்துக் கொண்டே அவர் போவதால் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அவர்கள் கமிட்டாகும் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் இயக்குனர் பாலா விரைந்து படப்பிடிப்பை முடித்தால் இன்னும் பல நடிகர்கள் பாலாவோடு இணைந்து பணியாற்றுவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.