இதுவரைக்கும் பெண் வேடத்தில் நடிக்காத 4 நடிகர்கள்.. அந்த பயம் யார விட்டுச்சி

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் பலரும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்துள்ளனர், வில்லனாக நடித்தவர்கள் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். அப்படி நடிப்பில் அசத்திய நடிகர்கள் ஏராளமானோர்.

முதலில் மாஸாக நடித்த நடிகர்கள் அதன் பிறகு அனைத்து விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஒரே விதமான கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் ரசிகர்களிடம் தங்களுக்கான வரவேற்பு குறையும் என்பதற்காகவே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர பல நடிகர்களும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அதுபோல் நடிகர்கள் பலரும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பல நடிகர்களும் ஒரு சில காட்சிகளாவது பெண் வேடத்தில் நடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பாடலில் பெண் வேடத்திலும், கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்தில் முழு பெண்ணாகவும். விஜய் ஒரு பாடலுக்கு பெண்ணாக நடித்து இருப்பார்.

ஆனால் இதுவரைக்கும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்காத ஒரு சில நடிகர்களில் 3 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் தியாகராஜ பாகவதர் எந்த ஒரு படத்திலும் பெண்ணாக நடித்தது இல்லை, அதற்கு அடுத்து பி யு சின்னப்பா மற்றும் எம்ஜிஆர் மற்றும் அஜித் உட்பட ஒரு சில நடிகர்கள் இதுவரை பெண் வேடத்தில் நடித்தது இல்லை.

அதற்கு என்ன காரணம் என்னவென்றால் எம்ஜிஆர் பல படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். அதனால் பெண் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் பெரிதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதற்காகவே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மறுத்துள்ளார். மேலும் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு முழுத் திறமை வேண்டும் என்பதற்காகவும் நடிக்க மறுத்துள்ளார்.