இதயதிருடன் படத்தில் ஜெயம் ரவி கூட நடிச்சது இவர்தாங்க.. இப்ப வேற மாறி இருக்காங்க

தமிழில் 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காம்னா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றவர் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.

அதன் பிறகு மீண்டும் 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை பெறாததால் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார்.

இருந்தாலும் அப்படியே விட்டுவிட மாட்டோம் என மீண்டும் ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தனர். கூட்டிட்டு வந்ததற்காக ஒரு கிளாமர் பாடல், ஒரு ரொமான்டிக் சீன் என படத்தில் பெரிய முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமல் சராசரி நாயகியாக பயன்படுத்திக் கொண்டனர்.

அதன்பிறகு காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் அவருக்கு கிடைத்த வரவேற்பு தமிழில் சுத்தமாக இல்லை என்பதே உண்மை. அங்கேயும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிய திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

35 வயதான காம்னாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக குழந்தைகள் பெற்ற நடிகைகள் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் இவரும் சினிமாவுக்கு அடிபோட்டு வருகிறார்.

அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தினமும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியிட்ட ஒருபுறம் சட்டையை இறக்கி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கோடிகளில் நூல் விட்ட அரவிந்த்சாமி.. இந்த பட்டம் பறக்கவே வேணாம் என ஓடிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்த அரவிந்த்சாமிக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து வாய்ப்பு குறைய அதன் பிறகு தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இயக்குனர்கள் சும்மா இருப்பார்களா வருபவர்களுக்கு ...