இணையத்தில் லீக்கான விஜய் சேதுபதி, பகத் பாசிலின் கதாபாத்திரம்.. கடுப்பில் லோகேஷ்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் காளிதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

படத்தினை பற்றி எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் படப்பிடிப்பு தளத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இன்னும் கூடிய விரைவில் படத்தை பற்றி அப்டேட்களை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் இணையத்தில் விக்ரம் படத்தின் அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விக்ரம் படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் வில்லனாக நடித்து வருகின்றனர். இதில் ஃபகத் ஃபாசில் அஜித் குமார் என்ற பெயரில் வில்லனாக நடித்து வருவதாகவும் விஜய் சேதுபதி சூழ கருப்பன் எனும் கதாபாத்திரத்தில் அதி வில்லனாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தற்போது லோகேஷ் கனகராஜ் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் பாதுகாத்து வந்த நிலையில் எப்படி இந்த தகவல் வெளியானது என படக்குழுவினர் அனைவரிடமும் கேட்டு வருகிறார். மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் படத்தை பற்றி அப்டேட்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

அப்படி இப்படின்னு படத்தை வியாபாரம் செய்த அண்ணாச்சி.. ரிலீஸ் எப்போது தெரியுமா.?

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தி லெஜன்ட். இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடித்திருக்கிறார். மேலும் மறைந்த சின்னத்திரை கலைவாணர் விவேக் தி லெஜன்ட் ...