இடியாப்ப சிக்கலில் தயாரிப்பாளர் கமல்.. எதிர்பாராத கூட்டணியில் விஜய் சேதுபதி, விக்ரம்

கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம் தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி, தலைவாசல் விஜய், வடிவேலு உள்பட ஏராளமானோர் இதில் நடித்திருந்தனர்.

சிவாஜியின் யதார்த்த நடிப்பின் மகுடம் தேவர் மகன். கமலே இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் விக்ரம் படப்பிடிப்பில் கமல் நடித்து வருகிறார். இப்படம் 2022ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ் நாராயணன் ஒரு சிறந்த எடிட்டர், கமலின் விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் இவர்தான்.இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இல் கமலை வைத்து தேவர்மகன்-2 எடுக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. இப்படம் இரண்டாம் பாகம் குறித்து மலையாள தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேவர் மகன் 2 உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும், நாயகனாக விக்ரமும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே கமலின் தயாரிப்பில் (விக்ரம் – கடாரம் கொண்டான், விஜய் சேதுபதி – விக்ரம்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது.

கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே. தேவர் மகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர்கள் தேவர் மகன் 2 படத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புள்ளது. கமல் நடிக்கும் எல்லா சூட்டிங் ஸ்பாட்களிலும் கலந்துகொண்டு இடைவெளியில் கமலிடம் கதைகளைக் கூறி வருகிறார் மகேஷ் நாராயணன்.

அதனால் தேவர்மகன்-2 கமலை வைத்து மகேஷ் நாராயணன் எடுக்க விருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் காக இன்னொரு படமும் இயக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. அந்த படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி போன்றவர்கள் நடிப்ப இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் எந்த படத்தை எடுக்கப் போவது என்று மகேஷ் நாராயணனும் குழம்பி வருகிறார். இடியாப்பச் சிக்கலை உருவாக்கி வருகிறார் கமல். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற படம் தான் இருக்கப்போகிறது. தேவர்மகன்-2 வா இல்லை விக்ரம் விஜய் சேதுபதி படமா என மகேஷ் நாராயணன் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.