இடமில்லாமல் தத்தளித்த முன்னணி நடிகருக்கு உதவிய ராதிகா.. தாராள மனசு, குவியும் பாராட்டு

80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ரஹ்மான். இவர் முதன் முதலில் மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார். அதனை அடுத்து இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ரஹ்மான் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

நாயகனாக நடித்து வந்த ரஹ்மான் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது குணச்சித்திரம் மற்றும் முதன்மை கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் கலக்கி வரும் ரஹ்மான் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துருவங்கள் பதினாறு, 7 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது நடிகர் ரகுமான் மலையாளத்தில் சமாறா ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து, நடிகர் ரஹ்மானை தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் ரகுமானால் அங்கு சென்று டப்பிங் பேச முடியவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.

இந்நிலையில் தான் முன்னணி நடிகை ராதிகா ரகுமானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அதாவது நடிகர் ரகுமானின் பிரச்சனையை அறிந்த ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானிடம் கூறியுள்ளாராம்.

பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் மட்டுமே அந்த ஸ்டுடியோவில் நடைபெறுமாம். ஆனால் நட்பு காரணமாக நடிகர் ரஹ்மானுக்காக இந்த ஸ்டுடியோவை ராதிகா விட்டுக் கொடுத்துள்ளாராம். நடிகை ராதிகா சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா? தேர்வு பட்டியலில் இருக்கும் 3 அழகிய நடிகைகள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. இதனால் ...