விஜய் டிவி பல திருப்பங்கள் நிறைந்த சூப்பர் ஹிட் சீரியல்களை வழங்கி வருகிறது. தற்போது, மிகவும் சுவாரசியமான சீரியல்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது தான் ‘பாவம் கணேசன்’ என்ற தொடர். இந்த தொடரில் kpy புகழ் நவீன், நேகா கவுண்டா, ஆனந்த் பாண்டி, அனில ஸ்ரீகுமார் போன்றோர் நடிக்கின்றனர்.

இத்தொடரில் நடித்து வரும் விஷாலினி கதையின் நாயகனான கணேசனுடைய மூத்த அக்கா சித்ராவாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் உறவினரும் ஆவர். இளையராஜா தான் இவருக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் நடிகை விஷாலினி பங்கேற்றுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘தன் கணவர் சபரி ஞானபிரகாஷ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உட்படுத்தியதாகவும், அதுமட்டுமின்றி பல மோசடி வேலைகளில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இது மட்டுமின்றி தனது கணவரான சபரி ஞானபிரகாஷ் நிறைய பெண்களோடு தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது இசைஞானி இளையராஜாவுக்கும், யுவன்ஷங்கர் ராஜாவிற்கும் தெரியாது என்று கூறியுள்ளார். என் கணவர் தவறானவர் என்று எனக்கு திருமணத்திற்கு பின்பு தான் தெரிய வந்தது என்றும் இது தனக்கு திருமணத்திற்கு முன்பே,தெரிந்திருந்தால் நான் இந்த திருமணத்தை செய்து கொள்ளாமல் இருந்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

எனவே நடிகை விஷாலினியை அவரது கணவர் சபரி ஞானபிரகாஷ் அடித்து கொடுமை செய்துள்ள காரணத்தினாலும் மற்றும்  கருத்து வேறுபாடு காரணமாகவும்  இருவரும் சட்டபூர்வமான விவாகரத்து செய்து கொண்டனர்.

தற்போது நடிகை விஷாலினி சீரியல்,டப்பிங் என மிகவும் பரபரப்பாக இருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ என்றத் தொடர்மூலம் நடிகை விஷாலினியை பிரபலமாக்கி வருகிறது. இனிவரும் காலங்களில் அவரை திரைப்படத்திலும் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.