இக்கட்டான சூழ்நிலையிலும் DD-யை கூப்பிடாத விஜய் டிவி! சிவங்கிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதன் பின் குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிரபலமாகி வருபவர்தான் சிவாங்கி. இவருடைய கொஞ்சல் பேச்சுனாலும், குழந்தை தனத்தினாலும் சிவாங்கியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிப்பதுண்டு.

இந்நிலையில் தற்போது இவரைத் தேடி படவாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது. அத்துடன் சிவாங்கிக்கு தொகுப்பாளராக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேற உள்ளது.

ஏனென்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதால், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை சிவாங்கி தொகுத்து வழங்க போவதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சிவாங்கியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆங்கர் சிவாங்கி’ என்ற புகைப்படத்தையும் பதிவிட்டு, இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

ஆனால் ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏன் டிடி-யை பயன்படுத்தாமல் சிவாங்கிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்?’ என்ற கேள்வி விஜய்டிவி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் டிடி-க்கும் விஜய் டிவிக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் சிவாங்கிக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பதால் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

15 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. அடேங்கப்பா, 75 படங்கள் நடித்து இருக்காங்களா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் கம்பம் மீனா. இவருடைய பலம் என்னவென்றால் வட்டார மொழி பேசுவதன் மூலம் தனித்துவமான நடிகையாக விளங்குகிறார். மேலும் சமூக ...