ஆர்யா, விஷாலுடன் நேருக்கு நேர் மோதல்.. OTT-யை வைத்து ரவுண்டு கட்டும் ஜோதிகா

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா அவரின் தோற்றத்திற்கும் தோரணைக்கும் தலையில் வைத்து கொண்டாடத ரசிகர்களே இல்லை S.Jசூர்யா இயக்கத்தில் வாலி படத்தின் வாயிலாய் அறிமுகமானவர் வாலிபர் வட்டத்திற்கு குயின் ஆகிப்போனார்.

நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ஜோதிகா சில வருடங்கள் வரை நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார். 36 வயதினிலே படத்தின் வாயிலாய் ரீ என்ட்ரி கொடுத்தவருக்கு அடுத்தடுத்து பெண்ணியம் பேசும் கதைகள் வெற்றியை தேடித்தந்ததோடு மீண்டும் மார்க்கெட்டை கிடு கிடுவென உயர வைத்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்படுவதும் வெளியிடப்படுவதுமாய் இருந்து வருகிறது. நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு ஒரு பக்கம் வெளியீடு ஒரு பக்கம் என படுபிசியாக இருந்து வருகிறார் சூர்யா.

நடிகை ஜோதிகா தங்கையாகவும் நடிகர் சசிக்குமார் அண்ணாகவும் நடித்திருக்கும் உடன் பிறப்பே படமும் தயாராகி வருகிறது. கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி மற்றும் கலையரசன் முக்கிய வேடங்களில் நடித்த அப்டேட் ஏற்கனவே வந்திருந்தது. அதனையடுத்து படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

படம் ஓடிடி வெளியீடுதான் என்பது உறுதிப்படுத்தவே சில கால அவகாசம் தேவைப்பட்டது. இப்போது ஓடிடி வெளியீடுதான் என்பதை உறுதிப்படுத்தியதோடு இப்படம் வருகிற அக்டோபர் 13 ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஷால் நடிப்பில் எனிமி மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படங்கள் இதே தேதியில் வெளியிடப்படுவதாய் கூறப்பட்டிருந்த நிலையில் விஷால் மற்றும் ஆர்யாவுக்கு போட்டியாக களம் காண்கிறார் நடிகை ஜோதிகா.