ஆர்ஆர்ஆர் படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.. பிரம்மாண்ட புரமோஷனால் திக்கித் திணறும் ராஜமவுலி

ராஜமௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

ஆர் ஆர் ஆர் படக்குழு நாடு முழுவதும் இப்படத்தின் விளம்பரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இப்படத்தை எல்லா இடங்களிலும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வைத்துள்ளனர். இதனால் ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆர் ஆர் ஆர் படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மொழிக்கு ஏற்ப படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

இப்படம் உருவான தெலுங்கு மொழியில் அதிகம் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் முக்கியமான திரையரங்குகளில் ஆர் ஆர் ஆர் படத்தை தமிழில் இல்லாமல் தெலுங்கு வெர்ஷனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆர் ஆர் ஆர் படத்தை 2டி பார்மட்டில் வெளியாகிறதா அல்லது 3டி பார்மெட்டில் வெளியாகிறதா என்ற பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அதனாலேயே பல தியேட்டர்களில் இன்னும் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே பலமுறை ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் இப்படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. மீண்டும் படத்திற்கு இதுபோன்ற சிக்கலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ராஜமௌலி எப்படி மீண்டு வருவார் என்பதை பெரிய கேள்விக்குறியாக உள்ளது.