ஆரவாரத்துடன் வெளியான பீஸ்ட் திரைப்படம்.. செலிபிரிட்டிகளின் வருகையால் திக்குமுக்காடிய தியேட்டர்கள்

நீண்ட நாட்களாக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த பீஸ்ட் திரைப்படம் இன்று ஆரவாரமாக வெளியாகியிருக்கிறது. படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முன்பு அதிகாலையிலேயே குவிந்து விட்டனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், கவின், கீர்த்தி சுரேஷ், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முதல் காட்சியை காண்பதற்கு ஆவலுடன் வந்திருந்தனர். இதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தற்போது முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் படம் வேற லெவலில் இருப்பதாகவும், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வந்த கத்தி, துப்பாக்கி போன்ற படங்களை எல்லாம் இந்த படம் ஓவர்டேக் செய்து விட்டதாகவும், எதிர்பார்த்த அளவிற்கு மேல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதிலும் இடைவேளைக்கு முன்பு விஜய் பேசும் வசனங்களும், படத்தின் இரண்டாம் பாதியில் அவரின் வெறித்தனமான நடிப்பும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.

அதோடு இப்படம் வெளிநாட்டிலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் இப்படத்துக்கு திரையுலகில் ஆர்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பீஸ்ட் திரைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இயக்குனர் ஒரு மாஸ் படத்தை கொடுத்துள்ளதாக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவருடைய முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்தப் படமும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.