ஆரம்பித்த இடத்திற்கே வந்த பிரபுதேவா.. போதும்டா சாமி என பெரிய கும்பிடா போட்டாரு

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, முதன்முதலாக 1989ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இவ்வாறு நடிகராகவும், டான்ஸ் மாஸ்டர் ஆகவும் இருந்த பிரபுதேவா அதன்பிறகு இயக்குனராக தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, வில்லு போன்ற பல படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இயக்கி உள்ளார்.

தொடக்கத்தில் இவர் நடித்த படங்களும், இயக்கிய ஒரு சில படங்களும் சரிவர ஓடவில்லை. அத்துடன் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல், சார்லி சாப்ளின்2, தேவி2 உள்ளிட்ட படங்கள் தோல்வியைத் தழுவியது.

ஆகையால் டான்ஸ் மாஸ்டராக இருந்த போது கிடைத்த பேரும் புகழையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இனி படங்களை இயக்குவதையும் நடிப்பதையும் நிறுத்திவிட்டு மீண்டும் நடன இயக்குனராக மட்டுமே செயல்பட திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் தரமான நல்ல கதையுடன் வரும் திரைப்படங்களை மட்டுமே இனி தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகவும் பிரபுதேவா முடிவெடுத்திருக்கிறார். அதுவரை டான்ஸ் மாஸ்டர் ஆக மட்டுமே செயல்படப் போகிறார்

ஆகையால் தற்போது பிரபுதேவா, நடன இயக்குனராக மஞ்சுவாரியர் திரைப்படத்திலும் வடிவேலு நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்திலும் பணியாற்றுகிறார். எனவே பிரபுதேவா நடன இயக்கத்தில் உருவாகியிருக்கும் தரமான பாடல்கள், இனி வரும் நாட்களில் வெளியாகும் திரைப்படங்களில் பார்க்க முடியும்.

90’s ஹீரோக்களுடனும் மாஸ் காட்டிய சிவாஜியின் 6 படங்கள்.. ரஜினி, கமலை மிஞ்சிய நடிப்பு

நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுபவர். அவருடைய கம்பீரமான குரலும், திறமையான நடிப்பும் ரசிகர்களை எப்பவும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். சினிமாவில் அவருடைய காலத்துக்கு பிறகும்கூட இளைய தலைமுறையுடன் ...
AllEscort