ஆமா! எனக்கும் விஜய்க்கும் பிரச்சனைதான்.. ஒரு வழியா நடந்ததை சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் முன்னணி நடிகர் தளபதி விஜயின் தந்தை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆரம்ப காலத்தில் தனது தந்தை தேர்வு செய்த படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் சமீபத்தில் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக அவரே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே நடந்த கருத்து வேறுபாடு கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. சில காலம் அமைதியாக இருந்த இந்த பிரச்சினை தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. எனக்கும் என் மகனுக்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான் என எஸ்.ஏ.சந்திரசேகர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பட வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திர சேகர், “துப்பாக்கி நான் தொடங்கிய படம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் அதை தொடர முடியவில்லை. எனவே தான் தாணு அப்படத்தை தயாரித்தார். விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுதான்.

விஜய் முதலில் சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். முதலில் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்கும் வகையில் படங்களை தேர்வு செய்ய செய்தேன். சமூக நோக்கத்தோடு படம் எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரும் உண்மையை பயப்படமால் உரக்க சொல்ல வேண்டும்.

ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும். நடக்கும் தவறுகளை உரக்க சொல்ல வேண்டும். விஜய் பெயர் எப்படி வந்தது என்று நான் கூறியதை திரித்து கூறியிருக்கிறார்கள். எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான். அது எங்கள் குடும்ப கதை. குடும்பம் என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும். அதை ஏன் எல்லோரும் பேச வேண்டும்” என கூறியுள்ளார்.

தங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனையை இது போன்ற பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சந்திரசேகர் கூறுவது போல் இது விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையில் உள்ள குடும்ப பிரச்சனை குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். மற்றவர்களின் குடும்ப பிரச்சனையை மீடியாக்கள் செய்தியாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.