ஆபாசமாக நடிப்பதற்கு உங்கள் கணவர் என்ன கூறினார்.? ஒரே பதிலால் அசர வைத்த தீபிகா படுகோண்

சினிமாவில் உள்ள நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிகர்களுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்தால் அது சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் இதனால் அந்த நடிகைக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தீபிகா மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

தற்போது தீபிகா படுகோன் கெஹ்ரையன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ட்ரெய்லரில் சித்தாந்துடன் தீபிகா படுகோன் மிக நெருக்கமான காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்திருப்பது வெளியாகியிருந்தது. இந்த ஆபாசமான காட்சிகளில் நடிக்க தீபிகா கணவர் ரன்வீர் சிங் அனுமதித்தாரா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தீபிகா, நான் மற்ற நடிகர்களுடன் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை ரன்வீர் சிங் பெருமையாக நினைப்பதாகவும், என்னுடைய நடிப்பைப் பார்த்து ரன்வீர் சிங் பெருமைப்படுவதாக தீபிகா கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்களை விட ரசிகர்கள் அதிகம் அதிர்ச்சியாகி உள்ளனர்.

பிரபலமான ஜோடிகள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இவர்களே இது போன்ற காட்சிகள் ஏதுவாக இருந்தால் பிரச்சனை இல்லை என்னும்போது ரசிகர்கள் இதை நினைத்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் விளம்பரத்திற்கு இந்த கவர்ச்சி நன்றாக வேலை செய்துள்ளது. இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் ரிலீசுக்காக ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.