


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வு நாளில் இருக்கிறார். பொதுவாக தல ஓய்வு நாட்களில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் செலவழித்து தனக்கு பிடித்த இடங்களை சுற்றிப் பார்ப்பதும் அங்கு ரசிகர்களுடன் போட்டோக்களை எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும் அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது வழக்கம். ஏரோநாட்டிக்கலில் அதிக ஆர்வம் கொண்டதால் மாணவர்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கி கொரோனா காலத்தில் அரசுக்கு வழங்கிய பெருமைக்குரியவர்.
தற்பொழுது ஓய்வில் இருக்கும் தல அஜித் இந்த முறை ஜாலியாக பைக்கில் இந்தியாவின் பல இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார். அண்மையில் வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.
தற்பொழுது இன்னும் சுவாரசியமாக ஒரு பெரிய ஆபத்தான பாறை மீது அவர் அசால்டாக நின்றுகொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ பார்ப்பவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இவர் தைரியமானவர் என்று நமக்குத் தெரியும். ஆனால் இந்த அளவுக்கு தைரியமாக ஆபத்தான பாறைமீது ஸ்டைலாக போஸ் கொடுப்பதை பார்க்கும்போது நம்மை தலைசுற்ற வைக்கும்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தல அஜித்தின் துணிச்சலை அவருடைய ரசிகர்கள் மீடியாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.