ஆந்திராவில் சூடுபிடிக்கும் அண்ணாத்த.. புதிய பெயருடன் வெளியான போஸ்டர்

அண்ணாத்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருப்பதால் படக்குழுவினர் படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தினை பற்றி அப்டேட் மற்றும் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அண்ணாத்த படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ மற்றும் மீனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் டீசரில் ரஜினிகாந்த தவிர வேறு எந்த நடிகர் காட்சியும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் தற்போது படத்தில் இவர்களுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை என கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்திற்கு மலையாளத்திலும், தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அண்ணாத்த படத்தை பல தயாரிப்பாளர்களும் வாங்கி தங்கள் மாநிலங்களில் வெளியிடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்போது அண்ணாத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஆசிய நராங் வாங்கியுள்ளார்.

அண்ணாத்த படத்தை தெலுங்கில் ‘பெத்தண்ணா’ என்னும் பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது அண்ணாத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது தெலுங்கிலும் அண்ணாத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

பாக்யராஜிடம் சிஷ்யனவதற்கு துடித்த பிரபல இயக்குனர்.. கடைசிவரை நிறைவேறாமல் போன ஆசை

எந்த ஒரு இயக்குனருமே எடுத்த எடுப்பிலேயே இயக்குனராக உருவாகவில்லை. ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின்னர் இயக்குனராக வளர்வதற்கு இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள், நிராகரிப்புகள் என பல சிக்கல்களை தாண்டியே ...
AllEscort