ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட கோபி.. பாக்யாவின் பாசத்துடன் விளையாடிய உத்தம புருஷன்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலியுடன் வாழ கோபி துணிந்துவிட்டான். இதற்காக கோபி நாளுக்கு நாள் படு மோசமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் பாக்யாவுடன் நெருங்கிப் பழகும் ராதிகாவை வேறு வீடு மாற வைக்க முயற்சி செய்வதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கோபியின் கார் நிற்பதை பார்த்த பாக்யாவிற்க கோபியின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இதை கோபியிடம் கேட்டு தெளிவுப்படுத்த முயற்சி செய்தபோது, பாக்யாவிடம் ஏதேதோ பேசி சமாளிக்கிறான். அதுமட்டுமின்றி என்னதான் பிடிக்காத மனைவி என்றாலும் அவள் மனதில் ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பின்பு, பாக்யாவை எப்படி தன் மீது அக்கறை இருப்பதை வெளிப்படுத்துவதற்காக உடல்நிலை சரியில்லாதது போல் நடிக்கிறான்.

முட்டாள் பாக்யாவும் உடல்நிலை சரியில்லை என்பதை கேட்டதும் படபடவென துடிதுடித்துக் கொண்,டு அதற்கான மருந்தை எடுக்க செல்கிறாள். இவ்வாறு கோபி பாக்யாவை எந்த இடத்தில் அடித்தால், அவளுடைய சந்தேகம் கலந்த கோபம் கலையும் என அறிந்து கொண்டு அதை செயல்ப்படுத்துகிறான்.

மேலும் பாக்யா தன்னுடைய சந்தேகத்தை எழில் இடம் சொல்லி குமுறுகிறார். பிறகு எழில் பாக்யாவை சமாதானப்படுத்துகிறான். இருப்பினும் பாக்யாவின் மனதில் ஏதோ இனம் புரியாத கலக்கம் இருந்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் ஆதாரத்துடன் கோபி சிக்கினாலும் எப்படியாவது தப்பித்தது விடுகிறாரே என்று ரசிகர்கள் குழம்பித் தவிப்பது மட்டுமல்லாமல் கூடியவிரைவில் கோபியின் வெட்டவெளிச்சம் தெரிய வேண்டும் எனவும் ஆசைப்படுகின்றனர்.