ஆண்டவருக்கே இந்த நிலைமையா.. ரஜினியை பின்பற்றும் கமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நேரத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர் உலகநாயகன் கமலஹாசன். இவர்கள் இருவரும் 16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினியை விட பல மடங்கு சம்பளம் பெற்றார் கமலஹாசன்.

அப்போது கமலின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகும். இதனால் அந்த கால கட்டத்தில் கமலை பின்பற்றினார் ரஜினிகாந்த். அதன்பிறகு தற்போது சூப்பர் ஸ்டாராக மாறியுள்ள ரஜினிகாந்தின் படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கிறது. தற்போது கமலை விட பல மடங்கு சம்பளம் பெறுகிறார் ரஜினி.

இந்நிலையில் தற்போது ரஜினியை பின்பற்றுகிறார் கமலஹாசன். தன்னுடைய படங்களுக்காக கமல் மிகுந்த சிரமப்படுவார். அப்பு கதாபாத்திரம், அவ்வை சண்முகி என இவர் போடாத கெட்டப்பே இல்லை என்று கூட சொல்லலாம். ஒரு படத்திலேயே பல வேடங்களில் நடிப்பது, வயதான தோற்றத்தில் நடிப்பது என சினிமாவுக்காக பல அர்ப்பணிப்பை செய்துள்ளார் கமல்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் விக்ரம். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரஜினியின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் டூப் வைத்து தான் எடுக்கப்படும். அதேபோல் விக்ரம் படத்தில் கமலின் பெரும்பாலான காட்சிகள் டுப் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போது கமலுக்கு வயது 67 ஆகிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய வலது காலில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். கமலின் வயதும், உடலும் பல காட்சிகளில் நடிக்க ஒத்துழைக்காததால் அந்த காட்சிகளில் டூப் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கமல் மூன்று மணி நேரம்தான் படப்பிடிப்புக்கு செலவிடுவாராம்.