ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயில்வான் ரங்கநாதன்.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்

ஒரு நடிகராக பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் இன்று யூடியூப் வீடியோக்கள் மூலம் வெகு பிரபலமாக இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடிகர் நடிகைகளைப் பற்றி திரைமறைவில் நடக்கும் பல அந்தரங்க விசயங்களையும் வீடியோக்கள் மூலம் புட்டு புட்டு வைக்கிறார்.

இதன் காரணமாகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் ஒரு சிலர் இவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பலரும் இவருடைய பேச்சை கேட்க ஆவலாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதேபோல் எப்படி இவர் இவ்வளவு தைரியமாக அனைவரைப் பற்றியும் பேசுகிறார் என்ற வியப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இதற்குப் பின்னால் அரசியல் ரீதியான பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. மேலும் இவரை பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. இவர் சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பாக பளுதூக்குதலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இதற்காக பிரத்யேகமாக உடற்பயிற்சியை மேற்கொண்ட இவர் 200 கிலோ வரை எடை தூக்கி முதல் பரிசையும் தட்டிச் சென்றிருக்கிறார். மேலும் சென்னையில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற இவர் மிஸ்டர் சென்னை ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதன் மூலமாக இவர் காவல்துறையிலும் சுமார் ஏழு வருடம் பணி புரிந்திருக்கிறார். அந்த சமயத்தில் இவர் எம்ஜிஆருக்கு பாடி காடாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு எம்ஜிஆருடன் நெருக்கம் ஏற்பட்டு அவருக்கு மிகவும் பிடித்தமான நபராக இருந்திருக்கிறார்.

சில நாட்களில் காவல்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இவர் பத்திரிக்கையாளராக பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். பின்னர் எம்ஜிஆரின் வழிகாட்டுதலால் சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்த இவர் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். அவருக்கு பயில்வான் என்ற பெயரை வைத்ததும் எம்ஜிஆர் தான்.

சினிமாவில் எந்த காலத்திலும் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போகாத இவர் இன்று ஒரு பத்திரிகையாளராக துணிச்சலுடன் பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் இவருடைய தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.