ஆக்ரோஷமாக வெளிவந்த ருத்ர தாண்டவம் ரிலீஸ் போஸ்டர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் திரெளபதி. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் அதிக வசூலைப் பெற்றிருந்தது. அதேபோல் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் காரணமாக அதிக அளவிலான விமர்சனங்களையும் திரெளபதி படம் சந்தித்தது. ஒரே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மோகன் பிரபலமானார்.

என்னதான் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருந்தாலும், திரெளபதி படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையே பெற்றுத் தந்தது. எனவே இயக்குனர் மோகன் இயக்கும் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு உருவானது. அவ்வாறு எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள படம்தான் ருத்ர தாண்டவம்.

திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரிச்சர்ட் தான் இப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இவர் தவிர கெளதம் மேனன், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூபின் இசை அமைத்துள்ளார். ஜி.எம்.பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 7ஜி பிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. தற்போது இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ருத்ர தாண்டவம் படத்தை திரையரங்குகளில் திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். திரௌபதி படத்தை போலவே ருத்ரதாண்டவம் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தால் கடுப்பான பிரபல நடிகை.. வயிற்றெரிச்சலில் புலம்பித் தவிக்கும் அவலம்

அழகான முகம்,கவர்ச்சியான உடல், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பு ,ரசிகர்களை கிறங்கடிக்கும் நடனம் என தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகை நயன்தாரா, 37 வயது ஆகியும் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் ...