அஸ்வினை போல் கேரியரை தொலைக்க போகும் விஜய் டிவி பிரபலம்.. ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது

சின்னத்திரை சீரியல்களில் மூலம் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலருடைய கவனத்தை பெற்ற நடிகர் அஸ்வின், கதாநாயகனாக முதல் முதலாக நடித்திருந்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கொஞ்சம் ஓவரா கெத்து காண்பிக்கும் அளவுக்கு பேசி தன்னுடைய கேரியரையே தொலைத்து விட்டார்.

அப்படி ஒரு நிலைமை இன்னொரு விஜய் டிவி பிரபலத்திற்கும் வரப்போகிறது என பேச்சு அடிபடுகிறது. அதாவதுவிஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த புகழ், அதன் பிறகு  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் புகழ் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் புகழ், சினிமாவில் சீக்கிரம் வளர்ந்து விடுவார் என பலரும் நம்பினார்கள். ஆனால் முதலில் ரசிகர்களிடம் யதார்த்தமாக பழகிக் கொண்டிருந்த புகழ் தனக்கான ரசிகர் கூட்டத்தை பார்த்தவுடன் கெத்து காட்டுவதாக கூறி வருகின்றனர்.

அதாவது கடை திறப்பு நிகழ்ச்சிகள் சென்றால் பாடிகார்ட் உடன் செல்வது படத்தின் ஆடியோ லான்ச் க்கு பாடிகாட்ஸ் உடன் செல்வது என தொடர்ந்து ஓவர் பந்தா காட்டி வருவதாக கூறி வருகின்றனர். சமீபத்தில்கூட அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் நடித்த படத்திற்கு இருவருமே ஓவராக பந்தா காட்டி வந்தனர்.

அதேபோல் படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்து விட்டாலும், தான் ஹீரோ என்பது போல் நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர். அதுவும் இவருடைய நடவடிக்கையை பார்த்த பலரும் அஸ்வின் முதலில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அவரது ஓவரான கெத்து காட்டும் நடவடிக்கை பார்த்த ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

தற்போது இதே நிலைமைதான் புகழ்க்கும் வர இருப்பதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே புகழ், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன்3 துவங்கப்பட்ட போது, ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்ற தெனாவட்டு ஆரம்பத்தில் வராத புகழ் நிகழ்ச்சி துவங்கிய ஒருசில வாரத்திலேயே மீண்டும் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் குக் வித் கோமாளி சீசன்3  நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.