அவ்வை சண்முகி இந்த படத்தின் அட்ட காப்பியா.? KS ரவிக்குமார், கமலை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி பெண் வேடமிட்டு பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் நடித்து உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

இதில் சுரேஷ் சக்கரவர்த்தியின் மனைவியாக புகழ் பெற்ற கோடைமழை வித்யா நடித்திருந்தார். சுரேஷ் சக்கரவர்த்தியின் நடிப்பு  பலரின் பாராட்டையும் பெற்றது.இந்த சீரியல் குறித்த வீடியோ எந்த சமூக வலைத்தளங்களிலும் தற்போது இல்லை.

அதே சமயம் அந்த நாடகத்தின் தழுவலில் உருவான படம்தான் அவ்வை சண்முகி.  அதில் கமலஹாசன் பெண்வேடமிட்டு நடித்திருப்பார். இந்த தொடரும் அவ்வை சண்முகி படமும் ஒரே சாயலில் இருந்தது.

இப்பொழுது போல் 90களில் ட்ரோலோ, மீம்ஸ்களோ கிடையாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தான் அவ்வை சண்முகி திரைப்படத்தை கலாய்த்து இந்த சீரியல் வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா நடிப்பில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம்.

இருந்தாலும் அவ்வை சண்முகி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இவை இரண்டுமே அமெரிக்கப் படமான “மிஸஸ் டவுட் ஃபயர்” என்ற திரைப்படத்தின் காப்பி ஆகும். இதனை அறிந்த ரசிகர்கள் இங்கிலீஷ் படத்தின் காப்பியா என்று கழுவி ஊற்றிய காலங்களும் உண்டு.