அவ்ளோ தான் உங்களுக்கு, கம்முனு இருக்கனும்.. துரை சிங்கமாக மாறி அதிரடி காட்டிய சூர்யா

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாகி விட்டார். அவர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கப் போகிறார், சிறுத்தை சிவாவுடன் இணையப் போகிறார் என்றெல்லாம் பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் சூர்யா அடுத்ததாக பாலா இயக்கும் திரைப்படத்தில் தான் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். சூர்யா, பாலா இருவரும் இணையும் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்திருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மார்ச் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதற்காக மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக செட் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா மிகவும் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதற்குப் பிறகு அவர் 18ஆம் தேதி திட்டமிட்டபடி மதுரைக்கு செல்ல இருக்கிறார். இந்த படத்துக்கு ஹீரோயின் இன்னும் முடிவாகாத நிலையில் அங்கு சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா இயக்குனர் பாலாவுக்கு ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டிருக்கிறார். அது என்னவென்றால் இந்தப் படத்திற்கு மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் மட்டும்தான் கால்ஷூட் கொடுக்கப்படும். அதற்குமேல் ஒரு நாள் கூட எக்ஸ்ட்ராவாக கொடுக்க முடியாது.

அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அனைத்தையும் எடுத்து முடித்து விடுங்கள். அதன் பிறகு நான் கிளம்பி விடுவேன் என்று ரொம்பவும் கறாராக சொல்லிவிட்டாராம். பாலா படம் என்றாலே படப்பிடிப்பு முடிவதற்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்க சூர்யா இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசராக மாறி பேசியதை பாலா கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.