தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்தார். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு விதமான கேள்விகள் கேட்க அதற்கு சரியான பதில் அளித்து வந்தார்.

தற்போதெல்லாம் காமெடி நிகழ்ச்சிகள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி போல் இருப்பதாகவும் மேலும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிரமபடுவதாகவும் கூறினார். மேலும் படத்தில் இடம் பெற்ற கவர்ச்சியை விட தொலைக்காட்சியில் அதிகமான கவர்ச்சி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்பிறகு பிரபல தொகுப்பாளினி அனுசியா பரத்வாஜ் ஒரு திறமையான நடிகை எனவும் ஆனால் அவர் ஆடை அணியும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறியிருந்தார். இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஒரு மூத்த நடிகர் இந்த மாதிரி எல்லாம் கூறலாமா என கேள்வி கேட்டு வந்தனர்.

கோட்டா சீனிவாச ராவ் பேசியதைக் வீடியோவில் பார்த்த அனுசுயா பரத்வாஜ். மூத்த கலைஞர் கூறிய சில கருத்து தனக்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியும். தேவையில்லாமல் இதைப் பற்றி பலரும் பேசி வருவது வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் திருமணமாகி ஒரு பெண் தொழில் துறையில் பணியாற்றுவது பெரிய விஷயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண் இன்னும் வேலை செய்து வருகிறார். ஆணாதிக்கம் நெறிமுறைகள் பேசுகிறீர்கள் எனக்கூறினார்.

அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்த மாதிரி கருத்து தெரிவித்திருப்பது வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒரு நிகழ்ச்சியில் ஆடையை குறித்து விமர்சிக்கும் நடிகர்கள் திரைப்படங்களில் நடிகர்கள் மது அருந்துவது, தவறாக பேசுவதும் மற்றும் கேவலமாக ஆடை அணிவதும் இதைப் பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் திருமணம் ஆகியும் குழந்தை பெற்ற நடிகர்கள் ஆடையில்லாமல் கூட படத்தில் நடித்து வருகிறார்கள் என கூறினார். அதாவது கோட்டா சீனிவாசன் படங்களில் ஆடை இல்லாமல் நடித்தது பற்றி மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் பலரும் கோட்டா சீனிவாசராவ் சொன்னதுபோல இப்போதெல்லாம் படங்களைவிட தொலைக்காட்சியில்தான் அதிகப்படியான கவர்ச்சியை காட்டி வருகின்றன.

அதற்கு ரசிகர்கள் படங்களாக இருந்தாலும் சரி தொலைக்காட்சிகள் இருந்தாலும் சரி ஆடை சரியாக அணிந்து வருவது மிகமிக முக்கியம் ஏனென்றால் பெரியோர் முதல் சிறியவர் வரை பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தரக்குறைவான ஆடைகள் அணிந்து வருவது தவறான விஷயம் தான் என கோட்டா சீனிவாசனுக்கு அனுஷ்கா பரத்வாஜ் பதிலடி கொடுத்தது போல் அனுசுயா பரத்வாஜ் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.