அவர் வாய் ரொம்ப நாரும் என நடிக்க மறுத்த பிபாசா பாசு.. உச்ச கட்ட அவமானத்தில் நட்சத்திர நடிகர்

இயக்குனர் மணிரத்னத்தின் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் 2000 ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் மாதவன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும், படத் தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னுடைய பன்முகத் திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.

தற்சமயம் மாதவன் படங்களில் நடிப்பதை விட வெப் சீரிஸ்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிபாசா பாசு மாதவனுடன் ‘ஜோடி பிரேக்கர்ஸ் (Jodi Breakers)’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பின்போது மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிபாசா அடம் பிடித்திருக்கிறார். ஏனென்றால் இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த 2012-ஆம் ஆண்டு கிரீக் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு 12 நாட்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் இந்திய உணவு கிடைக்காமல் படக்குழுவினர்கள் மற்றும் மாதவன் உட்பட சிரமப்பட்டார்களாம்.

அதன் பிறகு பஞ்சாபி பசங்கள் சிலர், பஞ்சாப் உணவு கிடைக்கும் இடத்தை காட்டினார்களாம். அங்கு பட்டர், சிக்கன் சாலட்ஸ், வெங்காயம் உள்ளிட்ட உணவு வகைகளை வயிறு முட்ட சாப்பிட்டார்களாம். மாதவன், சாப்பாட்டு பிரியர் என்பதால் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறார்.

அன்றைக்கு கதாநாயகி பிபாசா உடன் முத்தக்காட்சியில் நடிக்க இருந்ததால், மாதவன் வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு கொண்டிருந்ததைப் பார்த்த பிபாசா, அவருடைய வாயில் வெங்காய நறுமணம் வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அருவருப்பில் மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கி இருக்கிறார்.

இதற்காக பிபாசா மேக்கப் ரூமில் இருந்து வெளியே வராமல் நீண்ட நேரமாக தாமதித்து வரவே இல்லையாம். இவ்வாறு மாதவனுடன் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை குறித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் நடிகை பிபாசா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.