அவர் தான் என்னுடைய வெல் விஷர்.. அதிர்ச்சி அளித்த மெழுகு டால் பிரியங்கா மோகன்

தற்போதைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா, திரிஷாவை போன்று இவரும் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.

இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்காக பல தயாரிப்பாளர்களும் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

பார்ப்பதற்கு க்யூட் டால் போன்று இருக்கும் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் எங்கு திரும்பினாலும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோ என்று அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் நெல்சன் குறித்து பேசிய கருத்து ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நெல்சன். அவர்தான் பிரியங்காவை தன்னுடைய டாக்டர் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனால் நெல்சன் தான் தன்னுடைய வெல் விஷர் என்று ப்ரியங்கா ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் இவர் கமிட்டாகும் எந்த படங்களாக இருந்தாலும் அதை பற்றி அவரிடம் தெரிவித்து விடுவாராம். அந்தப் படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் அவர் கேட்டுக் கொள்வாராம்.

அதுமட்டுமல்லாமல் நெல்சன் கூறும் சில அறிவுரைகளை பிரியங்கா அப்படியே பின்பற்றி வருகிறாராம். தற்போது இந்த விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களுக்குள் இது மட்டும்தானா அல்லது அதையும் தாண்டி வேறு எதுவும் காதல் வலையில் விழுந்து உள்ளார்களா என்று கோடம்பாக்கமே சலசலத்து வருகிறது.