அவர் கெட்டப்புக்கு இவர் மட்டுமே பொருந்துவார்.. மிரட்டலான அந்த பட ரீமேக்கில் சைப் அலிகான்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் தனித்துவமான நடிப்பு கெத்தான வசனம் என வித்தியாசமான கதைக்களத்தை வைத்து புஷ்பா காயத்ரி இயக்கியிருந்தார்.

விஜய் சேதுபதி இணையான கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். மாதவன் போலீஸ் கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி குறிப்பிட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்த அளவிற்கு விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரும் தங்களது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் வேதா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்.

இப்படம் வெளிவந்த பொழுது பல மொழிகளிலும் விக்ரம் வேதா படத்தை ரீமேக் செய்ய பல நடிகர்கள் முன்வந்தனர். ஹிந்தியில் முதலில் அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அமீர்கான் இப்படத்தில் நடிக்க மறுத்ததையடுத்து பின்பு ஹிருத்திக் ரோஷனும் மற்றும் சைப் அலி கானும் இணைந்து நடிக்க ஆரம்பித்தனர்.

கிருத்திக் ரோஷன் பிறந்தநாளன்று விக்ரம்வேதா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர். தற்போது சைப் அலிகான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாதவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைப் அலி கானின் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தை விரைவில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் படத்தினை பற்றி அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். கிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் இருவருடைய கெட்டப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தினை பண்டிகை நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.