ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக கூடிய சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலுக்கென மாபெரும் ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலில் நடிகை ஷபானா கதாநாயகியாகவும், நடிகர் நரசிம்ம ராஜூ, நடிகை பிரியா ராமன், விஜே கதிர், சஞ்சய் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரபல நடிகர் ஏற்கனவே ஜமீன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனாலேயே இந்த செம்பருத்தி சீரியலில் ஜமீனாகவே நடிப்பதற்கான வாய்ப்பை இவருக்கு கொடுத்துள்ளனர். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அவன் இவன். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜிஎம் குமார் ஜமீன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தக் கதாபாத்திரத்தில் இவர் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து, தற்போது செம்பருத்தி சீரியலில் ஜமீன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவரை புக் செய்துள்ளனர். ஏற்கனவே செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரியின் ஆதிகடவூர் குடும்பத்தை பற்றி மிக சிறப்பாக படம் பிடித்துக் காட்டி வருகின்றனர்.

அந்த ஜமீன் குடும்பத்தில் இவரும் ஒருவராக நடிகர் ஜிஎம் குமார், ஜமீனாக நடித்து வருகின்றார். கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களை மாற்றி இருந்தாலும், கதை வழக்கம் போல் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நடிகரின் வருகையை தொடர்ந்து ரசிகர்கள் இந்நாடகத்தில் பல ட்விஸ்டுகளையும், கதையில் முன்னேற்றத்தையும் எதிர்பார்த்து வருகின்றனர். இவரின் வருகையால் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.