‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு குரல் கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம்.. வெளியான சுவாரஸ்யமான தகவல்!

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து ஹிட்டான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் நடிகர் விஷால் சில காட்சிகளில் பெண் வேடம் அணிந்து இருந்தார். இந்தப்படத்தில் விஷாலுக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை செந்தில் குமாரி டப்பிங் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஏனென்றால் ‘அவன் இவன்’ படத்தில் ஒரு காட்சியில் பெண் போன்ற வேடமணிந்து மகளிர் நிலையத்தில் பணிபுரியக்கூடிய போலீஸ் வீட்டிற்கு திருடனாக சென்றிருப்பார். மேலும் அந்த காட்சியில் நிகழக்கூடிய உரையாடலுக்கு சின்னத்திரையை சேர்ந்த நடிகை செந்தில்குமாரி டப்பிங் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக தெளிவான உச்சரிப்பு இருக்கக்கூடிய மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இனிமையாகவோ அல்லது கனமான குரலை கொண்டிருப்பவரோ கதைக்கு ஏற்றவாறு டப்பிங் ஆர்டிஸ்டாக தேர்ந்தெடுக்கப்படுவர். கதையில் நடித்து வரும் கதாபாத்திரத்தின் குரலில் இடையூறு இருந்தாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ டப்பிங் ஆர்டிஸ்ட்டை நியமிப்பர் படக்குழுவினர்.

அதேபோன்றுதான் கிராமத்துப் பெண்ணின் குரலாக நடிகை செந்தில்குமாரின் குரல் ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு கச்சிதமாக பொருந்திருக்கும். மேலும் நடிகை செந்தில் குமாரி வெள்ளித்திரையில் களவாணி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சுல்தான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் பல சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர், கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அத்துடன் நடிகை செந்தில்குமாரி தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகியான கண்ணம்மாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.