அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 5 பாகங்களாக வெளிவர உள்ள பிரம்மாண்ட படைப்பு

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையே படைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார். ஒரு பாகம் இரண்டு பாகம் அல்ல தொடர்ந்து ஐந்து பாகங்கள் வரை இயக்கி வெளியிட திட்டமிட்டு இருந்தார். இதற்கான வெளியீட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா நோய் தொற்று காரனமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் வெளியீட்டு தேதியும் மாற்றப்பட்டது. முதல் பாகத்தை விட 3டி முறையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள அவதார் படங்களின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவதார் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியும், நான்காம் பாகம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதயும், ஐந்தாம் பாகம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டு தேதி ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முதல் பாகத்தை விட இந்த பாகங்கள் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன்னி லியோன் புது பட போஸ்டரை வெளியிட விஜய்சேதுபதி.. கூர்மையான கத்தியுடன் மிரட்டல்

அடல்ட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் கனடா நாட்டில் பிறந்தவர். அடல்ட் படங்களில் தன்னுடைய இளம் பருவத்தில் நடித்து புகழ் பெற்றவர் இவர் தற்போது அதில் இருந்து ...