அவங்க கொடுக்கிற காசு, கௌரவம் மட்டும் வேணுமா.? ஆஸ்கர் நாயகனுக்கு வழுக்கும் கண்டனங்கள்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைத்து தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ ஆர் ரகுமான் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை வாங்கி நம் இந்திய சினிமாவிற்கே பெருமை தேடித்தந்தவர்.

அப்படிப்பட்ட இவர் சமீபகாலமாக இந்திக்கு எதிராக பல சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார். ஹிந்தி மொழி தேவை இல்லை என்று அவர் பல இடங்களிலும் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்து வருகிறார். இதனால் அவருக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு இவர் ஒரு விழாவின் போது மேடையில் ஹிந்தி நடிகர்கள் கலராகவும், அழகாகவும் இருப்பதால் தான் அவர்களை மக்கள் அதிகமாக ரசிக்கின்றனர். அதேபோல் இங்கு உள்ளவர்களுக்கும் நல்ல வலிமையான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும்.

நம் தமிழ் திரைப்படத்தை அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் ஏ ஆர் ரகுமான் தமிழில் எந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஹிந்தியிலும் பிரபலம்.

இதை குறிப்பிடும் ரசிகர்கள் பாலிவுட்டில் இருந்து சம்பாதிக்கும் காசும், அவர்கள் கொடுக்கும் கௌரவமும், அதன் மூலம் கிடைத்த ஆஸ்கர் விருதும் மட்டும் உங்களுக்கு வேண்டும் ஆனால் ஹிந்தி வேண்டாமா என்று அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் சில ரசிகர்கள் இந்திக்கு எதிராக மார்தட்டி பேசும் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி அவரைப் பற்றி சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்க ஏ ஆர் ரகுமான் இந்தியாவுக்கு வராமலேயே துபாயில் இருந்து கொண்டு பல படங்களுக்கும் இசையமைத்து கொண்டிருக்கிறார்.