அவங்க ஓரினச்சேர்க்கையாளர்.. சமந்தா விவகாரத்தில் மூக்கை நுழைத்த ஸ்ரீ ரெட்டி

கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களையும் அலங்கரிக்கும் செய்தி என்னவென்றால் சமந்தா மற்றும் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யா இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்று பிரிந்து தான். ஆரம்பத்தில் வதந்தியாக இருந்தாலும் இறுதியில் இது உண்மையான செய்தியாகவே மாறிவிட்டது.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அவருக்கும் படங்கள் குறைந்த பாடில்லை விவாகரத்துக்குப் பிறகு கூட அடிக்கடி சமூகவலைதளங்களில் நாக சைதன்யாவை குறி வைத்து ஏதாவது பதிவுகளை வெளியிட்டு வருவார்.

ஆனால் தற்போது வரை நாக சைதன்யா இருவரது விவாகரத்து குறித்து எந்த ஒரு செய்தியும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இதற்கிடையில் இருவரது விவாகரத்திற்கு காரணம் சமந்தாவின் ஸ்டைலிஷ் மேன் ப்ரீதம் தான் எனவும் கூறினர். இருவருக்கும் உள்ளான உறவு தெரிந்துதான் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து செய்து விட்டார் என்றார்கள்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ப்ரீதம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் எனக்கும் சமந்தாவுக்கும் என்ன ஒரு தொடர்பு என்பது நாக சைதன்யாவுக்கு தெரியும் இருந்தாலும் இப்படி ஒரு வதந்தி வெளியாகும்போது அதை பற்றி அவர் வாய் திறக்காமல் இருப்பது தான் தனது வருத்தத்தை கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி வழக்கம்போல் சமந்தாவின் விஷயத்தில் மூக்கை நுழைத்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். சமந்தாவின் ஸ்டைலிஷ் ப்ரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் எனவும் கண்டிப்பாக இவரால் சமந்தாவுக்கு விவாகரத்து நடக்க வாய்ப்பே இல்லை எனவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த செய்திதான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.