அவங்க இல்லனா தாலி கட்டிக்க மாட்டேன்.. 2ம் திருமணத்தால் வசமாக சிக்கிய கோபி அங்கிள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரே ட்ராக்கில் 2 பேரை ஒட்டிக்கொண்டிருக்கும் கோபி, எப்பொழுது தன்னுடைய மனைவி பாக்யாவிடம் மாட்ட போகிறான் என சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியாவது தப்பிக்கும் கோபி, இந்த தடவை பெட்ரூமில் பாக்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே பாக்யா ராதிகாவிடம் மட்டுமே சொன்ன அந்த விஷயத்தைப் பற்றி பாக்கியாவிடம் கோபி கேட்டு மாட்டி கொண்டான். இருப்பினும் ஏதேதோ சொல்லி அதையும் சமாளித்து விட்டாள்,

அதன்பிறகு ராதிகா, கோபியிடம் பாக்யா நிச்சயம் நம்முடைய திருமணத்திற்கு வரவேண்டும் என சொல்கிறாள். ஆனால் அப்போது ராதிகாவிடம் மறுப்பு தெரிவிக்காத கோபி, அவனுடைய மனதில், ‘என்னுடைய திருமணத்தில் அவள்தான் இருந்தாள்’ என கொஞ்சம் காமெடியாகவே யோசிக்கிறான்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப, இத்தனை வருடமாக தப்பித்த கோபி இனிவரும் நாட்களில் நிச்சயம் அவனால் தப்பிக்க முடியாது பாக்யா அல்லது ராதிகா இருவரில் ஒருவருடன் மட்டுமே வாழ முடியும் என்ற சூழ்நிலை வரும்போது கோபி நிச்சயம் ராதிகாவை தான தேர்ந்தெடுப்பான்.

ஏனென்றால் பாக்யாவின் பிள்ளைகள் அனைத்தும் பெரிய பிள்ளைகள் என்பதால், இன்னும் சில நாட்களில் அவர்அவர் அவரது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் ராதிகாவிற்கு கோபியை விட்டால் யாரும் இல்லை என்ற எண்ணம் கோபிக்கு ஆழமாக இருக்கிறது.

இருப்பினும் இதனால் ஏமாற்றம் அடைய போவது பாக்யா மட்டுமே, இருந்தபோதிலும் பாக்யாவின் செல்லப்பிள்ளையான எழில் மற்றும் குடும்பத்தினரின் ஒரு துணையுடன் கோபி இல்லாமலே பாக்யாவால் வாழ முடியும் என்பதை வாழ்ந்து காட்டப்போகிறாள்.