நெட்பிலிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் மீனாக்ஷி சுந்தரேஸ்வர். கரண் ஜோகர் தயாரிப்பு என்பதனால் எதிர்பார்ப்பு சற்றே அதிகம். படம் ரிலீஸ் ஆன தினத்தன்று படு மொக்கை என சொல்லப்பட்ட படம். ஆனால் இன்று இந்திய அளவில் நெட்டபிலிக்சில் நம்பர் 1 இடத்தில உள்ளது.

தென்னிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) பட ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கடுப்பாகி விடுவார்கள். மொழி உச்சரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு, கலாச்சாரம் என  சொதப்பலோ சொதப்பல் தான். அட அப்படி என்னதான் சொதப்பு சொதப்பியுள்ளது இந்த படக்குழு என பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளது போல தோன்றுகிறது.

கதை – குடும்ப பிஸ்னஸ் பிடிக்காமல் ஐ டி ஊழியர் ஆக துடிக்கும் ஹீரோ சுந்தரேஸ்வர். இவருக்கு பெண் பார்க்கும் சமயத்தில் வீடு மாறி மீனாக்ஷி வீட்டினுள் சென்றுவிடுகின்றனர். எனினும் தீவர ரஜினி ரசிகையான நாயகிக்கும், தன் லட்சிய நோக்குடன் உள்ள நாயகனுக்கும் திருமணம் சுபமாக முடிந்து விடுகிறது.

முதலிரவு நடக்க கூட இல்லை, ஹீரோவுக்கு பெங்களுருவில் வேலை கிடைக்க; மனிதர் அடுத்த நாளே கிளம்பி விடுகிறார். அங்கு பேச்சுலர்களுக்கு மட்டும் தான் வேலை, அதுவும் ஒரு வருடம் தான் என தெரிந்தவுடன்; தனக்கு திருமணம் ஆனதை மறைத்து விடுகிறார்.

செல் போன் பேச்சு, ஸ்கைப் வீடியோ, ஊடல், கூடல், நேரடி சந்திப்பு என வாழ்க்கை செல்ல; இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. வேலையில் சாதித்துவிட்டு நாயகன் மதுரையில் நாயகியை சமாதானப்படுத்த தேடுகிறார். இறுதியில் தர்பார் பட முதல் காட்சியில் இந்த ஜோடி இணைவதுடன் படம் முடிகிறது.

சினிமாபேட்டை அலசல் – பாலிவுட் ஆசாமிகள் எதற்கு நம் ஊர் பின்னணியில் போதிய ஹோம் ஒர்க் செய்யாமல் இப்படி அசட்டு தனமான படத்தை ஏன் எடுத்தனர் என்பது தான் புரியவில்லை. தெளிவான ரெபர்ன்ஸ் கிடையாது, தொய்வான திரைக்கதை.

ஹீரோவின் சாக்லேட் பாய் லுக், ஹீரோயினியின் அப்பாவித்தனமான நடிப்பும் தான் நம்மை காப்பாற்றுகிறது. 90 ஸ் கிட்ஸ் தாராளமாக இப்படத்தை ஒருமுறை பார்ப்பார்கள், மற்றவர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான். (பி கு- இப்படத்தில் பணியாற்றியதில் நமக்கு தெரிந்த ஒரே நபர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மட்டுமே)

சினிமாபேட்டை ரேட்டிங் 2/5