அர்ஜூனின் இளைய மகளா இது.? அக்காவை மிஞ்சும் அடுத்த ஹீரோயின் ரெடி

தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல திரைப்படங்களில் கலக்கி வந்த ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது குணசித்திரம், வில்லன் போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருடைய இரண்டாவது மகளின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

அதில் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல நடிகரின் மகள் என்பதால் நிச்சயம் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி தன் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தங்கை அஞ்சனாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட அந்த விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

ஐஸ்வர்யாவை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை வர்ணித்து தள்ளுகின்றனர். அர்ஜுன் வீட்டில் அடுத்த ஹீரோயின் தயார் என்றும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் க்யூவில் நிற்க போகிறார்கள் என்றும் அஞ்சனாவை பற்றி ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

முதல் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு சரியாக அமையாத நிலையில் தற்போது இரண்டாவது மகளையும் அர்ஜுன் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் அஞ்சனாவை நாம் ஹீரோயினாக பார்க்கலாம்.