அர்ஜுன் இயக்கி, தயாரித்த 6 படங்கள்.. இதுல மூன்று படம் மாஸ் ஹிட்

நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் தயாரிப்பிலும் முக்கியத்துவம் கொடுத்தவர் அர்ஜூன். அப்படி இயக்கி தயாரித்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். இதில் முக்கியமாக ஜெய்ஹிந்த் படம் இன்றுவரை ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சேவகன்: 1992 ஆம் ஆண்டு சேவகன் திரைப்படத்தை நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்தார். இப்படமே நடிகர் அர்ஜுன் இயக்கிய முதல் தமிழ்படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன், குஷ்பு, கேப்டன் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மரகதமணி. இப்படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். இப்படத்திற்கு விமர்சனங்கள் இருந்தாலும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது

பிரதாப்: அர்ஜுன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் அர்ஜுன், குஷ்பூ, கனகராஜ், தேவன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அர்ஜுன் பிரதாப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படம் தெலுங்கில் முட்டாள் ரவுடி என்ற பெயரில் வெளியானது. இப்படத்தின் இசை மரகதமணி.

வேதம்: 2001 இல் வெளியான அர்ஜுன் மற்றும் சாக்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.வினித், திவ்யா உன்னி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார். அர்ஜுன் இப்படத்தை இயக்கி, தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு வைரமுத்து மற்றும் பா விஜய் பாடல் எழுத வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது.

ஜெய்ஹிந்த்: 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் அர்ஜுன், ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில், மனோரமா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் தயாரிப்பு எஸ்.செயின் ராஜ் செயின். ஜெய்ஹிந்த் 2 பெயரில் 2012 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் மற்றும் கன்னடத்தில் அபிமன்யு என்ற பெயரில் இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருந்தார் நடிகர் அர்ஜுன்.

தவம்: 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தவம். இப்படத்தை இயக்கியவர் சக்தி பரமேஷ், கதையாசிரியர் பூரி ஜெகநாத். இப்படத்தை தயாரித்தவர் நடிகர் அர்ஜுன். இப்படத்தில் நடிகர் அருண்விஜய் மற்றும் வந்தனா குப்தா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.இவர்களுடன் வடிவேலு, ஜனகராஜ் மற்றும் ராணி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசை டி இமான். இப்படம் தோல்வியை தழுவியது.

வல்லக்கோட்டை: இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக வெளிவந்தது வல்லக்கோட்டை. இப்படத்தில் அர்ஜுன், ஹரிப்பிரியா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, வெண்ணிறா ஆடை மூர்த்தி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார். இப்படம் தோல்வி அடைந்தது