அர்ஜுனுக்கு ஜோடியான இளம் நடிகை.. உங்களுக்கு மட்டும் எப்படி சார் இப்படி அமையுது

ஆக்சன் திரைப்படம் என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருவது ஆக்சன் கிங் அர்ஜுன் தான். இவர் அதிகமாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததால் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தனது பயணத்தை 1979ஆம் ஆண்டு முதல் தொடங்கியவர், பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஜென்டில்மேன், முதல்வன், ரிதம் போன்ற பல படங்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்றவை. தற்போது அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது திரைப் பயணத்தை தொடங்கினார் .

அதைத் தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றி பெற்றார். அதன் மூலமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன .நீ தானா அவன் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆக்ஷன் கிங் உடன் இணைந்து புதிய பரிமாணத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் லட்சுமணன் இயக்கும் திரைப்படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார்கள். இது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்படும் திரைப்படம் என்று கூறப்படுகிறது. திரைப்படம் பற்றிய தகவல்களை தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் அர்ஜுன் விசாரணை அதிகாரியாக வருகிறார் .மேலும் இதில் ஆக்சன் விட செயல்திறனும் புத்திசாலித்தனமும் தான் முக்கியமாக காட்டப்படுகிறது .ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் குழந்தைகளின் ஆசிரியராக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.